For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிட்டல் விடுத்த தனியார் பல்கலைக் கழக பெண் ஊழியர் கைது

Google Oneindia Tamil News

Vasantha
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் பல்கலைக்கழக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில், ஸ்ரீவில்லிபுதுத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் இருந்து இந்த மிரட்டல் விடப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான போலீசார் அந்த தனியார் பல்கலைக் கழகத்திற்கு சென்று அங்கு இயங்கி கொண்டிருந்த 17 கம்ப்யூட்டர்களை திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம் நாச்சிமுத்து என்ற முகமதுகான் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அங்கு அக்வுண்ட்டாக பணியாற்றும் ராமசந்திரபுரத்தை சேர்ந்த வசந்தா(28) என்பவர் அதை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது.

வசந்தாவுக்கும் அவரது கணவர் நாச்சிமுத்துவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இவ்வாறு அவர் தவறு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரிலும், சென்னை சைபர் கிரைம் போலீசார் கொடுத்த புகார் மூலமும் வசந்தா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வசந்தாவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்ற நீதித்துறை நடுவர் எண் 2 ல் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A woman from Srivilliputhur has been arrested for sending death threat emails to Chief Minister Jayalalitha and TN temples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X