டெங்கு காய்ச்சல்: நாட்டு மருந்து வி்ற்பனை ஜோர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்காசி: டெங்கு காய்ச்சலை தடுக்கும் நாட்டு மருந்துகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்கத்தில் முலிகை வளம் கொண்ட வனம் மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் உள்ளது. இங்கு அகத்தியர் உள்ளிட்ட பல்வேறு முனிவர்களும், சித்தர்களும் இப்பகுதி வாழ் மக்களின் நோயை தீர்க்கும் பொருட்டு பல்வேறு முலிகைகளையும் கண்டறிந்து நோய்க்கு தக்கவாறு மருந்து அருளியுள்ளனர். காலப்போக்கில் மனித இனம் வளர வளர நாட்டு மருத்துவமும், மூலிகைச் செடிகளும் அழியும் நிலை ஏற்பட்டது. அதன்பி்ன் ஆங்கில மருத்துவம் வந்த பின் பலரும் ஆங்கில வைத்திய முறையை பின்பற்றித் துவங்கினர். ஆங்கில முறைப்படி வைததியம் செய்தால் உடனடியாக நோயை குணப்படுத்த முடியும். நிரந்தரமாக குணப்படுத்த முடியாது.

அகஸ்தியர் அருளிய மூலிகை, நாட்டு மருத்துவத்தின் பயன் இப்போது பொதுமக்களுககு புரியத் தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் சக்தி நிலவேம்புக்கு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். ஏராளமானோர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நில வேம்பு பொடியை வாங்கி தண்ணீரில் கலந்து சுண்ட காய்ச்சி வற்றியவுடன் கசாயமாக குடிக்கின்றனர். இதன் மூலம் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இந்த நிலவேம்பு பொடி சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் அத்தகைய மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும் வீட்டுக்கு வீடு துளசி, தூதுவளை, கீழாநெல்லி, ஓமம் மற்றும் பல வகை மூலிகை செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dengue fever has so far claimed 19 lives in Tirunelveli district and many are hospitalised. At this time, people's attention has turned towards herbal medicine. As a reult, sales of herbs have increased a lot.
Please Wait while comments are loading...