இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Petrol Bunk
டெல்லி: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் சரிவைத் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் பொருட்கள் விலை உயர்த்தப்படக் கூடும் என்று கூறப்பட்டது. மேலும் நாட்டின் பொருளாதார சிக்கலை சமாளிக்க கடினமான முடிவுகளை எடுக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ7.50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இப்புதிய உயர்வின் மூலம் தமிழ்நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் விலையின் ரூ80 ஆக இருக்கும்.

இருப்பினும் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The government on Wednesday announced a petrol price hike of Rs 7.50 per litre, effective from midnight today. With rupee depreciation leading to jump in oil import bill, Petroleum Minister S Jaipal Reddy on Tuesday had said that there was an immediate need to raise fuel prices.
Please Wait while comments are loading...