For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு காய்ச்சல்- கோவை, மதுரை சென்னையில் பாதிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் பரவிவந்த டெங்கு காய்ச்சல் மெதுமெதுவாக தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. கோயம்புத்தூர், மதுரை மற்று சென்னையில் 15க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மர்ம காய்ச்சலாக தொடங்கிய டெங்கு அடுத்தடுத்து மரணங்களை சம்பவித்தது. மொத்தம் 37 பேர் இதுவரை டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.

திருநெல்வேலியைத் தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை என தொடர்ந்து பரவிய டெங்கு காய்ச்சல் இப்போது கோவை, சென்னையை பாதித்துள்ளது.

திருவொற்றிïரைச் சேர்ந்த பெண் ஒருவரும், எழும்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரும், அயனாவரத்தைச் சேர்ந்த இளைஞரும் ஒருவரும் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை ஒன்று பலியானது. மேலும் சிலருக்கு டெங்கு அறிகுறி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கோவையில் 7 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 5 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய குழு முகாமிட்டு ஆய்வு நடத்தியது.

English summary
Fifteen more persons with suspected dengue fever have been admitted to hospitals in Chennai, Madurai and Coimbatore districts even as health authorities carried out fogging and spraying operations to contain the spread of the disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X