எங்களால்தான் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க முடியும்: பாரதிய ஜனதா கட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
BJP
ஹைதராபாத்: பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மட்டுமெ தனித் தெலுங்கானா மாநிலம் உருவாகும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார்.

தெலுங்கானா பகுதிகளில் நடைபெற உள்ள பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது, 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற சிறிய கட்சியாலோ, காங்கிரஸ் கட்சியாலோ சாத்தியம் அல்ல. பாரதிய ஜனதாவால் மட்டுமே தனித்தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க முடியும்.

மூன்று மாநிலங்களை உருவாக்குவதாக நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் நாங்கள் மூன்று மாநிலங்களை உருவாக்கினோம். இப்போது தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதாக நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். அதை நிறைவேற்றுவோம்.

நாங்கள் காங்கிரஸ் கட்சியைப் போல் அல்ல. அவர்கள் ஒரு வாக்குறுதி கொடுப்பார்கள். பின்னர் அதற்கு நேர் எதிராக நடந்து கொள்வார்கள் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seeking to boost BJP's chances in the bye-election to Parkal assembly seat in Telangana region, party MP and official spokesperson Prakash Javadekar today said separate Telangana is possible only with the BJP. Javadekar, who campaigned in support of the saffron party's nominee at Parkal in Warangal district, said separate statehood is neither possible with a sub-regional party like TRS, which has only two MPs nor with Congress.
Please Wait while comments are loading...