For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தில் மனித உரிமை மீறல் புகார்: விசாரணை நடத்துவதாக ஜெயலலிதா உறுதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தின் போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்ற குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, கூடங்குளத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர் தான் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் அல்லாத சில மாநில அரசுகள், மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்த குற்றச்சாட்டு பதில் அளிக்க தகுதியற்றது என்றார் ஜெயலலிதா.

English summary
The State Govt will inquire on Human rights violations charges in Kudankulam, CM Jayalalithaa said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X