For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் சரக்கு கட்டணம் 25 சதவீதம் உயர்வு-ஜூன் 1ம் தேதி முதல் அமல்

Google Oneindia Tamil News

டெல்லி: ரயி்ல் சரக்கு கட்டணம் கடந்த 1ம் தேதி முதல் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ரயிலில் பார்சல் அனுப்பியவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த 2011-2012 ஆண்டு கால அளவில் ரூ.1,600 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. எனினும் ரயி்ல்வே செலவினங்களுக்கு பற்றாக்குறை நிலவியதால், கடந்த மார்ச் மாதம் ரயில் சரக்கு கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ரயில் சரக்கு கட்டணம் மீண்டும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.370 கோடி வருமானம் அதிகரிக்கும்.

இது குறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

ரயில்களில் கொண்டு செல்லப்படும் பார்சல் மற்றும் லக்கேஜ் கட்டணங்களை சீராக்கும் நோக்கில் புதிய கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் புதிய கட்டணம் உயர்வு (25 சதவீதம் உயர்வு) அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு பத்திரிக்கைகள், இதழ்கள் உட்பட அனைத்து வகையான சரக்குகளுக்கும் பொருந்தும் என்றார்.

புதிய கட்டண உயர்வின்படி ஸ்டாண்டேடு, பிரிமியம், ராஜ்தானி என்ற 3 பிரிவுகளின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் அல்லாத ரயில்களின் பார்சல் சர்வீஸ் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு ஸ்டாண்டேடு கட்டணம் வசூலிக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு பிரிமியம் கட்டணம் வசூலிக்கப்படும். ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு ராஜ்தானி கட்டணம் வசூலிக்கப்படும்.

ஸ்டாண்டேடு கட்டணத்தின் கீழ் 10 கிலோ எடை கொண்ட சரக்கை 50 கி.மீட்டருக்குள் கொண்டு செல்ல, ரூ.1.31 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1.61 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதே தூரம் கொண்ட பிரிமியம் பிரிவில் ரூ.2.63 கட்டணத்திற்கு பதிலாக ரூ.3.28 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே தூரம் கொண்ட ராஜ்தானி பிரிவில் ரூ.3.93 பதிலாக ரூ.4.92 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்வு 19 சிறப்பு பார்சல் ரயில்களில் அமல்படுத்தப்படவில்லை.

English summary
The Indian Railways has hiked the parcel rates by 25 per cent on all goods with immediate effect, which will help it rake in Rs 370 crore more revenue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X