For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை, திருச்சியில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்: மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: தமிழகத்தின் கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு துறை தொடர்பான அமைச்சகங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் பற்றி கூறியதாவது:

சிவில் விமான போக்குவரத்து துறையில் நவி மும்பை, கோவா மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி மற்றும் லக்னோ, வாரணாசி, காயா ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும். நடப்பு நிதியாண்டில் டெல்லி மற்றும் சென்னையில் புதிய விமான சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

கூடங்குளத்தில் உள்ள இரு அணு உலைகள் செயல்பட்டதும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அத்துடன் அடுத்த ஆண்டுக்குள் மேலும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மன்மோகன்சிங் அறிவித்தார். மும்பை-ஆமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கும் இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

English summary
The Coimbatore and Trichy airports will be upgraded into international airport. This was announced by prime minister Manmohan Singh on Wednesday evening at a meeting at his residence to fix targets for infrastructure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X