இது இடி அமீன் ஆட்சி... ஸ்டாலின் காட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Stalin
வேலூர்: தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது இடி அமீன் ஆட்சி. போலி வழக்கில் திமுக நிர்வாகிகளைக் கைது செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் திமுக அஞ்சாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை இன்று ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். பி்ன்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் தற்போது இடி அமீன் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவை ஒடுக்குவதற்காக முக்கிய நிர்வாகிகள் போலி வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவற்றை கண்டு திமுக அஞ்சாது.

ஜெயலலிதாவினுடைய ஆணவ ஆட்சியைப் பார்த்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK treasurer Stalin has slammed the ADMK govt for slapping false cases against DMK leaders.
Please Wait while comments are loading...