விஜய் திமுகவுக்கும் தனக்கும் தான் போட்டி! எடப்பாடி நிலைமை ரொம்ப மோசம்! போட்டுத் தாக்கிய அதிமுக மாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் திமுகவை எதிர்த்தார், ஸ்டாலின் டெல்லியை எதிர்த்தார்.. ஆனால், எடப்பாடி, கோபியில் செங்கோட்டையனை எதிர்த்தும், கரூரில் செந்தில் பாலாஜியை எதிர்த்தும், போட்டியில் ஓ.பி.எஸ் ஐ எதிர்த்தும் உட்கட்சி பிரச்சனைகளை பிரதானப்படுத்தி பேசினாரே தவிர இவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் திமுகவை வீழ்த்துவதற்கு உண்டான வியூகத்தில் தவறிவிட்டார் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் எம்பியான கேசி பழனிசாமி.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," சென்ற நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் 2024ல் அதிமுக ஒன்றுபடுத்தப்பட்டால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க முடியும் என்கிற கருத்தை நான் முன்னெடுத்த போது தமிழ்நாடு முழுக்க அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவை அந்த கருத்து பெற்றது.

Edappadi Palaniswami DMK AIADMK

ஆனால் எடப்பாடி பழனிசாமி தெருவில் போகிறவர்கள் கருத்தை நான் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். வரவிருக்கும் தேர்தல் முடிவு அவரை கோட்டைக்கு அனுப்புமா? அல்லது தெருக்கோடியில் நிறுத்துமா? அதற்கான முடுவு மே 4 அன்று தெரியும்.

கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்றால் எடப்பாடி தெருக்கோடியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். விஜய் திமுகவுக்கும் தனக்கும் தான் போட்டி என்று களத்தை அமைத்து பிரச்சாரம் முன்னெடுத்தார், ஸ்டாலின் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி! திமுக கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் போட்டி என்று களத்தை நகரத்தினர்.

ஆனால் எடப்பாடி, கோபியில் செங்கோட்டையனை எதிர்த்தும், கரூரில் செந்தில் பாலாஜியை எதிர்த்தும், போடியில் ஓ.பி.எஸ் ஐ எதிர்த்தும் உட்கட்சி பிரச்சனைகளை பிரதானப்படுத்தி பேசினாரே தவிர இவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் திமுகவை வீழ்த்துவதற்கு உண்டான வியூகத்தில் தவறிவிட்டார்.

தன்னை மட்டுமே முன் நிறுத்திக்கொண்டு தான் மட்டுமே அதிமுக என்பதை நிரூபிப்பதில் மட்டுமே முயற்சி செய்தார். இதற்கான விடையும் வருகிற 4ம் தேதி தெரியும். ஒருவேலை அதிமுக ஆட்சி அமைத்தால் எடப்பாடி நிகரற்ற தலைவர் ஆகவும், ஆட்சி அமைக்க தவறினால் தலைமை மாற்றம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+