For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதிய அரசியல் பற்றிய மோடியின் பேச்சுக்கு பீகார் கட்சிகள் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
பாட்னா: சாதிய அரசியலால்தான் வளமான பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் பின்தங்கிப் போயிவிட்டன என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளதற்கு பீகார் மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குஜராத்தின் ராஜ்கோட்டில் பேசிய மோடி, ஒருகாலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் வலம் வந்த காலம்போய் சாதிய அரசியலால் அவை மிகவும் பின்தங்கிப் போய்விட்டன என்று எந்த ஒரு அரசியல் தலைவரையும் குறிப்பிடாமல் சாடியிருந்தார்.

மோடியின் இந்தக் கருத்து பீகாரில் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. பீகாரில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் கூடமோடியை விமர்சித்துத் தள்ளியிருக்கிறது. மோடி முதலில் தமது வீட்டை ஒழுங்காக வைத்துக் கொண்டு அடுத்தவர் வீடு பற்றி பேச வேண்டும் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்கள் யாரும் எங்களைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்.. நாங்கள் வளர்ச்சியடைந்துதான் வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு நரேந்திர மோடிதான் தலைவர் என்று கிண்டலடித்துவிட்டு மோடியின் பேச்சுக்குகடும் கண்டனம் தெரிவித்தார்.

மோடியின் பேச்சுக்கு பீகார் மாநில காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
The ruling Janta Dal(U) and opposition Rashtriya Janata Dal(RJD) have reacted sharply to Gujarat chief minister Narendra Modi's reported remarks blaming "festering caste politics" in Bihar as the main reason of its backwardness
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X