For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 1 மணிநேரத்தில் 3 முறை நிலநடுக்கம்

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று காலை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

Earth Quake

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் காஷ்மீரில் 27 நிமிட இடைவேளையில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகவும், 10.59 மணிக்கு ஏற்பட்ட நிலஅதிர்வு 5.9 ஆகவும் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கங்கள் ஹிந்து குஷ் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த அதிகாரி ஆமிர் அலி தெரிவி்ததார்.

இதற்கிடையே இன்று காலை 10.05 மணிக்கு காஷ்மீரில் 3.8 அளவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சிக்கிம்-நேபாளம் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

English summary
Three earthquakes on Monday shook Kashmir within an hour but there were no reports of any damage caused anywhere in the Valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X