For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வேளை பிரணாப் குடியரசுத் தலைவரானால் அடுத்த நிதி அமைச்சர் யார்?

By Mathi
Google Oneindia Tamil News

Jairam, Montek Singh Ahluwalia and Rangarajan
டெல்லி: நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த நிதி அமைச்சர் யாராக இருப்பார் என்ற யூக விவாதங்கள் டெல்லியில் பலமாக அடிபட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் 2013-ம் ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையானது 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தியே அமைய வேண்டியிருக்கிறது. இதனால் புதிய நிதி அமைச்சரின் பொறுப்பு கொஞ்சம் சவாலானாதாகவும் இருக்கும்.

இந்தப் பட்டியலில் தற்போதைய ஊரக வளர்ச்சித் துறை அமைசரும் முன்னாள் உலக வங்கி அதிகாரியுமான ஜெய்ராம் ரமேஷ் பெயரும் அடிபடுகிறது. அவர் சோனியாவுக்கு விசுவாசி என்ற காரணமும் கூடுதலாக சேர்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்பதால் பேசாமல் மன்மோகன்சிங்கே நிதித்துறையையும் தம் வசம் வைத்துக் கொண்டு சமாளிப்பார் என்றும் ஒரு பேச்சு உண்டு.

அதே நேரத்தில் நிதி அமைச்சராக அனுபவம் பெற்றுள்ள தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும் கூட அடிபடுகிறது. அதே நேரத்தில் 1990களில் நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஒரு அதிகாரியாக இருந்த மன்மோகன்சிங் எப்படி நிதி அமைச்சராகி காரணமாக இருந்தாரோ அதேபோல் நாட்டின் தற்போதைய சிக்கலான பொருளாதார நிலைமையில் திட்டக் குழு துணைத் தலைவரான மான்டேக் சிங் அலுவாலியாவையோ அல்லது பிரதமரின் பொருளாதார ஆலோசகரான ரங்கராஜனையோ நிதி அமைசசராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் குடியரசுத் தலைவராக பிரணாப் தேர்வு செய்யப்பட்டல் அவை முன்னவராக மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தேர்வு செய்யப்படலாம் என்கிறது டெல்லி தகவல்கள்.

English summary
With speculation about finance minister Pranab Mukherjee moving to the Rashtrapati Bhawan getting intense, there are whispers in the Capital on Mukherjee's successor in North Block, though nothing has been decided yet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X