For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.25,000 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது: திருப்பூர் எஸ்.பி., அதிரடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உடுமலைப்பேட்டை : வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற உடுமலைப் பேட்டை உதவி ஆய்வாளரை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் பூர்ணிமா (வயது 32). இவரிடம், கடந்த மாதம் சிவபதி காலனியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மனைவி அங்கையர்கண்ணி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தனது கணவர் மணிவண்ணனுக்கும், சுமதி என்ற ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், தனது கணவரை சுமதியிடமிருந்து மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவின்படி போலீசார் மணிவண்ணன் மீது வழக்கு பதிவு செய்ததும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்ற மணிவண்ணன் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டு வந்து விட்டார்.

போலிஸ் உதவி ஆய்வாளர் பூர்ணிமாவால் இந்த வழக்கில், நேரடியாக மணிவண்ணனை கைது செய்ய முடியாமல் போனாலும், அவர் மீது குற்றம் இல்லாத மாதிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமானால் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மணிவண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பூர்ணிமாவுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன் நேராக திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ராகர்க்கிடம் சென்று பூர்ணிமா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதை பற்றி புகார் கொடுத்துள்ளார்.

எஸ்.பி.அஸ்ராகர்க்கின் ஆலோசனைப்படி, செவ்வாய்கிழமை ஒன்பது மணிக்கு காவல் நிலையத்துக்கு தனியாக சென்ற மணிவண்ணன் பூர்ணிமா கேட்டபடி பணம் 25 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக கூறி அந்த பணத்தை பூர்ணிமாவிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பூர்ணிமா பெற்றுக்கொண்டதும், அதை குறுந்தகவல் மூலம் வெளியில் இருந்த எஸ்.பி.அஸ்ராகர்க்கிர்க்கு தெரிவித்து விட்டு. தன்மீது மனைவி கொடுத்துள்ள புகாரிலிருந்து தனக்கு ஆதரவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு பூணிமாவிடம் பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டியுள்ளார் மணிவண்ணன்.

மணிவண்ணனிடமிருந்து பணத்தை வாங்கிய ஐந்தாவது நிமிடம் காவல் நிலையத்துக்குள் நுழைந்த எஸ்.பி.அஸ்ராகர்க், சத்தமில்லாமல் எஸ்.பி வந்ததை பார்த்த போலீசார் அனைவரும், அரண்டு போய்விட்டனர். நேராக மணிவண்ணன் பூர்ணிமா இருவரும் பேசிக்கொண்டு இருந்த இடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பூர்ணிமாவிடம் பணத்தை எடுக்கும்படி சொல்லியுள்ளார். எஸ்.பி க்கு "சல்யூட்" அடித்துவிட்டு பேந்த பேந்த விழித்த பூர்ணிமாவிடம், இவரிடம் வாங்கிய பணம் 25 ஆயிரத்தை எடு என்று கூறியுள்ளார்.

மணிவண்ணன் பணம் கொண்டுவந்தது எஸ்.பிக்கு தெரியும் என்பதை தெரிந்து கொண்ட பூர்ணிமா தனது பேண்டு பாய்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எஸ்.பி யிடம் கொடுத்துள்ளார். இரவு பத்து மணிவரை பூர்ணிமாவிடமும், மணிவண்ணனிடமும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய எஸ்.பி அஸ்ராகர்க் அதன் பிறகு எஸ்.ஐ பூர்ணிமாவை மட்டும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

போலீசார் லஞ்சம் கேட்டதற்காக அவர்கள் மீது விசாரணை, இடமாற்றம், என்று வெட்டி நடவடிக்கைகளை எடுக்காமல், கைது செய்து நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள அஸ்ராகர்க்கின் அதிரடி நடவடிக்கையால் திருப்பூர் மாவட்ட போலீசார் மிரண்டு போயுள்ளனர். மதுரையில் இருந்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாக கடந்த மாதம் பொறுப்பேற்ற அஸ்ரா கார்க், லஞ்சம் வாங்கும் போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A woman police officer asked the accused Rs.25,000 as a bribe. She arrested by Tirupur S.P., Asra kark. He has warned the police officers that they will be either suspended or dismissed when they are found guilty of getting bribes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X