For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்தியானந்தா ஆசிரமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறார்கள்... யார்?

Google Oneindia Tamil News

Nithyanantha ashram
பெங்களூர்: நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்திய அதிகாரிகளும், போலீஸாரும் அங்குள்ள அறை ஒன்றில் 50 சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் யார், எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் பல அறைகளைப் பூட்டி சீல் வைத்து விட்டனர்.

அங்கு நடந்த சோதனையின்போது கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள், மது பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிப்பது போல கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.

சில அறையில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமிசிலைகள், பஞ்சலோக பொருட்கள் இருந்தது. ஆசிரமத்தில் 3 கார்கள் நின்றது. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் போலீசாரால் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

போலீசார் ஆசிரமத்தில் நுழைந்தபோது 200 பக்தர்கள் உள்ளே இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சில சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு ரகசிய அறையில் 50 சிறுவர்- சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அனைவருக்கும் 8 முதல் 15 வயதே இருக்கும். அவர்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களிடம் செக்ஸ் சில்மிஷ வேலைகளில் நித்தியானந்தாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் இதுகுறித்து தனியாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரமத்தில் இருந்த அத்தன பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். வெளிநாட்டுக்கார ஆதரவாளர்களைத்தான் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் விழிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கேயேதான் டேரா போட்டுள்ளனர்.

English summary
50 kids have been rescued from Nithyanantha's Bidadi ashram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X