For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மமதா மீது செமகடுப்பில் காங்கிரஸ்- முலாயமுடன் சேர்ந்து பரிந்துரைத்த மூவர் பெயரையும் நிராகரித்தது

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி:குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல்கலாம், மன்மோகன்சிங் அல்லது சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்தலாம் என்று முலாயம்சிங் யாதவும் மமதா பானர்ஜியும் முன்வைத்த யோசனையை காங்கிரஸ் கட்சி முற்றாக நிராகரித்துவிட்டது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறியதாவது:

நாட்டின் பிரதமராக 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து மன்மோகன்சிங்தான் நீடிப்பார். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மமதாவும் முலாயமும் பரிந்துரைத்த அனைவரது பெயரையும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.

கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் மமதாவுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். அவருடனான பேச்சுவார்த்தை விவரங்களை மமதா பானர்ஜி வெளியில் கூறியிருக்கக் கூடாது. அது தவறான அணுகுமுறை என்றார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது

English summary
The Congress has declared that there is no question of the Prime Minister moving out of his office - a suggestion made by allies Mamata Banerjee and Mulayam Singh Yadav last evening, creating a perfect storm. "We cannot spare Dr Manmohan Singh," said the party spokesperson Janardhan Dwivedi. He also said that the party rejects all three names Ms Banerjee and Mr Yadav suggested. Along with the PM, they had listed former Speaker Somnath Chatterjee and former President APJ Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X