For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!

By Shankar
Google Oneindia Tamil News

Beer
பீர் விலை உயர்வால் அரசுக்கு ரூ.300 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கவிருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் விற்கும் பீர் வகைகள் விலை நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் பீர்களின் விலையை ரூ.5, ரூ.10 மற்றும் ரூ 15 வரை உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் பீர் வகைகள் தற்போது ரூ.70, ரூ.80, ரூ.90, ரூ.100 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளில் 19 பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 70 ரூபாய்க்கு 4 கம்பெனிகள் பீர்களும், ரூ.80-க்கு 8 கம்பெனிகளின் பீர் வகைகளும், ரூ.90-க்கு நான்கு வகையான பீர் தயாரிப்புகளும், ரூ.100-க்கு மூன்று கம்பெனிகளின் பீர்களும் விற்பனை செய்யப்படுகின்றன (இதற்கும் மேல் ரூ 10 கூடுதலாக வைத்துதான் கடை ஊழியர்கள் விற்கிறார்கள். இதைக் கேட்க ஆளில்லை!).

பீர்களின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ.250 கோடியில் இருந்து ரூ.300 கோடி வரை வருமானம் கூடுதலாக கிடைக்கவிருப்பதாக என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளுக்கு விதிக்கப்படும் மாநில அரசின் ஆயத்தீர்வையை விட பீருக்கு விதிக்கும் ஆயத் தீர்வை குறைவாகும். இதனால் பீர் விற்பனையால் அரசுக்கு அதிகளவு வருவாய் கிடைக்காது. கோடையில் பீர் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 32 லட்சத்து 30 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனையானது. மே மாதத்தில் இது 36 லட்சத்து 42 ஆயிரமாக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் இவற்றின் அளவு 40 லட்சத்தைத் தாண்டும் என டாஸ்மாக் எதிர்பார்க்கிறது.

இன்னும் சில தினங்களில் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபான விலைகளும் உயர்த்தப்பட உள்ளன.

English summary
The Tamil Nadu govt is going to earn more than 300cr through the sales of price hiked Beer drinks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X