For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி திப்ருகார் டூ குமரிக்கு சாப்ட்வேர் என்ஜீனியர்களின் பயணம்

Google Oneindia Tamil News

National Integrity
திப்ருகார்: தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரிக்கு 3 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக தூரம் பயணிக்கும் ரயில் திப்ருகார்-கன்னியாகுமரி இடையிலான வாராந்திர விவேக் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலின் மொத்த பயண தூரம் 4243 கி.மீ, பயண நேரம் 82 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும்.

இந்த ரயில் திப்ருகாரில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 23:15 மணிக்கு புறப்பட்டு அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா, கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு புதன்கிழமை 10:25 மணிக்கு வந்து சேருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சத்திய நாராயணன், போஸ் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷரன் ஆகிய மூன்று சாப்ட்வேர் என்ஜீனியர்களும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி நேற்று (சனிகிழமை) திப்ருகாரில் இருந்து புறப்பட்ட விவேக் எக்ஸ்பிரஸில் பயணத்தை தொடங்கினர்.

இந்திய ரயில்வே ஆர்வலர் மன்றத்தில் (Indian Railways Fan Club Association) உறுப்பினர்களாக உள்ள அவர்கள் பெங்களுரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வரும் புதன்கிழமை கன்னியாகுமரியை வந்தடைகின்றனர்.

இந்த தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி பயணிக்கும் அவர்களுக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மற்றும் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்ட உள்ளது.

English summary
3 software developers working in Bangalore have boarded the India's longest railway route train Vivek express from Dibrugarh on saturday to insist national integrity. The train will reach Kanyakumari on wednesday where they will be given warm welcome.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X