திமுக செயற்குழுவின் தீர்மானம் என்ன?... பொதுக்கூட்டத்தில் விளக்குகிறார் கருணாநிதி!
Subscribe to Oneindia Tamil

புரசைவாக்கம் தானா தெருவில் இன்று மாலை இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குத் தொடங்கும் பொதுக்கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட பொறுப்பாளரான ஆர்.டி.சேகர் தலைமை வகிக்கிறார். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்டோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர். கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.
இன்று நடந்த திமுக செயற்குழுவில் அதிமுக ஆட்சியி்ல திமுகவினர் மீது போடப்பட்டு வரும் வழக்குகளைக் கண்டித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் ஜூலை 4ம் தேதி சிறைநிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து கருணாநிதி இன்றைய பொதுக்கூட்டத்தில் விவரித்துப் பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications