For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் புதிய தாக்குதல் நடத்த பேஸ்புக் மூலம் ஆள் பிடித்த அபு ஜிண்டால்!

Google Oneindia Tamil News

Abu jundal
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டில் புதிய தாக்குதல் நடத்தும் திட்டத்திற்காக பேஸ்புக், இமெயில் மூலம் ஆள் சேர்த்து வந்துள்ளான் அபு ஜிண்டால் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கியப் புள்ளியான அபு ஜிண்டால் தற்போது டெல்லி போலீஸார் வசம் உள்ளான். அவனிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மேலும் ஒரு புதிய தகவலை கக்கியுள்ளான் ஜிண்டால்.

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்த ஆண்டில் இந்தியாவில் ஒரு பெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குத் தேவையான ஆட்களை எடுக்கும் பொறுப்பை ஜிண்டால் ஏற்றுள்ளான். இதை பேஸ்புக், இமெயில் மூலம் அவன் நடத்தி வந்துள்ளான். இதற்காக 9 பேஸ்புக் மற்றும் இமெயில் முகவரிகளை அவன் பயன்படுத்தி வந்துள்ளான்.

ஆனால் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஜகியூர் ரஹ்மான் தற்போது சிறையில் அடைபட்டிருப்பதால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அபு ஜிண்டால் வைத்துள்ள அத்தனை பேஸ்புக் மற்றும் இமெயில் முகவரிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். அவனது பிரண்ட்ஸ் பட்டியலில் உள்ள அனைத்து இமெயில் ஐடிகளும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

English summary
As Indian intelligence officials continue to interrogate Abu Jundal over his alleged role in the 26/11 terror attacks, new details are emerging about the man, who is believed to be the highest-ranked Indian in the deadly Lashkar-e-Taiba group. Sources say that Jundal - whose real name is Zabiuddin Ansari and who has 10 aliases - had nine Facebook and email accounts and used the popular social networking site to hunt for recruits for a terror mission the LeT was planning to execute this year. The plan was however being hindered because Lashkar commander Zaki-ur-Rehman Lakhvi was behind the bars, say sources.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X