For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரபுஞ்சியின் சீதோஷ்ண நிலை மாறுகிறதா? மாறிக் கொண்டே போகும் மழையளவு

By Mathi
Google Oneindia Tamil News

Cherrapunji
சோரா: உலகிலேயே அதிக அளவு மழை பொழியக் கூடிய என்ற பெருமையை சிரபுஞ்சி மெல்ல மெல்ல இழந்துவிடுமோ என்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே மழைப் பொழிவின் அளவை சுட்டிக்காட்டி வானிலை ஆய்வாளர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

சிரபுஞ்சியானது வங்கதேசத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடிய இந்திய எல்லையோரப் பகுதி. மேகாலயா மாநிலத்தில் எல்லையோரத்தில் அமைந்திருக்கிறது. வங்கதேசம் தரைப்பகுதியாக இருக்கும். சிரபுஞ்சியில் இருந்தே வங்கத்தேசத்து சமவெளியை பார்க்க முடியும். வங்காள விரிகுடா கடலில் இருந்து எழும் குளிர்காற்று மேகங்கள் தவழ்ந்தோடும் மேகலாயாவின் சிரபுஞ்சி மீதுதான் முதலில் மோதுகின்றன. இதனால்தான் அங்கு மழைபொழிவு உலகிலேயே அதிகமாக இருந்து வருகிறது.

1973-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரைக்கும் சிரபுஞ்சியின் ஆண்சு சராசரி மழை அளவானது 11,820.8 மில்லி மீட்டராக இருந்து வருகிறது. இருப்பினும் 2010-ம் ஆண்டு 13,472.4 மில்லி மீட்டராக இருந்த ஆண்டு மழைப் பொழிவானது 2011-ம் ஆண்டு கணிசமாகக் குறைந்து 8732.2 ஆக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு 9069.9 ஆக பதிவாகி இருந்திருக்கிறது.

நடப்பு 2012-ன் நிலைமையோ வித்தியாசமானதாக இருக்கிறது. 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிரபுஞ்சி பெற்ற மழையளவு 15140 மில்லி மீட்டர். ஆனால் நடப்பு 2012-ல் வெறும் 175.2 மில்லி மீட்டர்தான். இன்னொரு விசித்திரமும் நிகழ்ந்திருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரலில் 226.3 மில்லி மீட்டர்தான். நடப்பு ஏப்ரலிலோ 1223.0 மில்லி மீட்டர் கொட்டியிருக்கிறது.

சிரபுஞ்சியில் நிலவி வரும் சீரற்ற மழைப் பொழிவானது புவிவெப்பயமாதலின் விளைவு என்ற போதும் அங்கிங்கெணாதபடி தொடரும் பசுமை வேட்டையைத் தடுத்தால்தான் சிரபுஞ்சியின் புகழைத் தக்க வைக்க முடியும் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.

English summary
The Meteorologists expressed fears Cherrapunji in Meghalaya which had world record for the most rainfal may lost it famous due to rainfall change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X