For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிழக்கு சீனக் கடற்பரப்பிலும் பஞ்சாயத்து: தீவுகளை வாங்கும் ஜப்பான் முயற்சிக்கு சீனா கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Island
பெய்ஜிங்: தென்சீனக் கடற்பரப்பில் பல்வேறு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் சீனாவுக்கு கிழக்கு சீனக் கடற்பரப்பில் ஜப்பான் தலைவலி கொடுக்கத் தொடங்கியுள்ளது.

கிழக்கு சீன கடற்பரப்பில் தியாவு யூ தீவு உள்ளிட்ட எண்ணற்ற தீவுகள் இருக்கின்றன. இவற்றில் எரிவாயு வளம் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த தீவுகளை சொந்தமாகவே வாங்கிவிடுவது என்று ஜப்பான் முடிவு செய்தது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிபை ஜப்பான் பிரதமர் யோஷிகோ நோடா சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

ஆனால் சீனா இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லியூ வெய் மின், பண்டைக்காலம் தொட்டு, தியாவு யூ தீவும் அதைச் சேர்ந்த தீவுகளும், சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசங்களாகும். தியாவு யூ தீவு மற்றும் அதைச் சேர்ந்த தீவுகளின் மீதான இறையாண்மையை உறுதியாகப் பேணிக்காக்கும் வகையில், சீன அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.

தென்சீனக் கடலைத் தொடர்ந்து கிழக்கு சீனக் கடலிலும் சீனாவுக்கு தலைவலி தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Japanese government plan to buy uninhabited islands owned by a private investor provoked condemnation from China, which also claims it owns the rocky outcroppings, the latest flare-up in a dispute over territory and resources in the East China Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X