2ஜி: ஆ.ராசாவிடம் அமலாக்கப் பிரிவு திடீர் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil
Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முதல் முறையாக திடீரென விசாரணை நடத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சிபிஐ தான் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பிற நாடுகளுக்குப் போன பணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு ராசாவை இதுவரை விசாரிக்காமல் இருந்து வந்தது.

இந் நிலையில் ஓராண்டாக சிறையில் இருந்த ராசா கடந்த மே மாதம் ஜாமீனில் விடுதலையானார்.

இப்போது அவரிடம் திடீரென விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கப் பிரிவு. அவரது நிதி ஆதாரங்கள், முதலீடுகள், ஸ்பெக்ட்ரம் விற்பனை, ஏலம் தவிர்க்கப்பட்டது ஆகியவை குறித்து ராசாவிடம் அமலாக்கப் பிரிவினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அன்னிய செலாவணி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் ராசாவின் இந்த விசாரணைகள் நடந்துள்ளன.

அவரிடம் மீண்டும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Enforcement Directorate has questioned former telecom minister A Raja in connection with its money laundering probe in the 2G spectrum case. This is the first time that the ED has questioned Raja in the case. During questioning, ED investigators grilled Raja on various
 issues related to spectrum allocation under his ministership and also about his personal finances, sources said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற