பணக்கார மாப்பிள்ளை வேண்டுமா? சீனாவில் அதற்கும் பள்ளி இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பணக்காரர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்வது குறித்து சீன ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரை சேர்ந்தவர் சூ பி, இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, பெரிய செல்வந்தரை திருமணம் செய்து கொண்டார். பணக்காரர்களை கவர்ந்து, அவர்களை திருமணம் செய்து கொள்வது தொடர்பான வகுப்பை கடந்த ஏழாண்டுகளாக சூ பி நடத்தி வருகிறார். இவருடைய வகுப்பில் படித்த 100க்கும் அதிகமான பெண்கள் இந்த பாடத்தால் பயன் அடைந்துள்ளனர். இந்த வகுப்புக்கு அவர் வாங்கும் கட்டணம் அதிகமில்லை ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. மொத்தம் 40 வகுப்புகள் வரை நடத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளியில் 26 வயது முதல் 35 வயது வரை உடைய மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பணக்காரரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் 44 வயதான பெண்மணி ஒருவரும் தற்போது இந்தப் பள்ளியில் கல்வி கற்று வருகிறார். வகுப்பு நடக்கும் காலத்தில் பணக்காரர்களை சந்திக்கவும் இந்த ஆசிரியை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.

"பணக்கார வாலிபரை சந்திக்கும் முன் அவருடைய பழக்க வழக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர் அடிக்கடி எங்கு செல்கிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அவர் செல்லும் இடத்துக்கு நீங்கள் சென்று தற்செயலாக அவரை சந்தித்தது போல பாசாங்கு செய்ய வேண்டும். அவருடைய பழக்கத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் ஆடம்பரமான உணவுக்கெல்லாம் ஆர்டர் செய்யக்கூடாது. நீங்கள் பழகும் நபர் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கி கொள்ளலாம். முதல் இரண்டு மாதங்களுக்கு அவருடன் மிகவும் நெருங்கி பழகக்கூடாது. ஓராண்டுக்குள் அவரை திருமணம் செய்து கொள்ள அவசரப்படக்கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் உங்களை மணப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றால் நீங்கள் அவருடைய மனைவியாக முடியாது' என்கிறார், இந்த வினோத ஆசிரியை.

எதற்கெல்லாம் பள்ளி திறப்பது என்று வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. கலி முத்திப்போச்சு என்பது இதுதானோ?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
students are having a class that claims to teach them how to marry multimillonaires. It began on May 27 , and within a month, a total of 12 women has enrolled the class that costs 10,800 yuan with 40 hours of courses to learn how to marry a multimillonaire. With their age range from 26 to 35, they have all received higher education. A 44-year-old female student claiming to have over a billion personal assets paid 20,000 yuan to become a VIP in the course to get closer to rich men.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற