ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீனுக்கு ரேட் பிக்ஸ் செய்த விவகாரம்: மேலும் 2 நீதிபதிகள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
Janardhan Reddy
ஹைதராபாத்: லஞ்சம் பெற்றுக் கொண்டு கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்த வழக்கில் மேலும் 2 நீதிபதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் செய்துள்ளனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஜனார்த்தன ரெட்டி தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர்க்கு ஜாமீன் வழங்க ரூ10 கோடி லஞ்சம் கேட்டவர் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராமராவ். இது தொடர்பாக புகார் செய்து தொடரப்பட்ட வழக்கில் பட்டாபிராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல நீதிபதிகளும் இதுபோல் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஜாமீன் கொடுத்த விவகாரம் அம்பலமானது.

இதையடுத்து ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லட்சுமி நரசிம்மராவ், ஸ்ரீகாகுளம் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பிரபாகர்ராவ் ஆகியோர் சிக்கினர். இருவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளாமான ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் அடிப்படையில் இரண்டு நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The anti-corruption bureau (ACB) sleuths on Thursday formally arrested judges D Prabhakar Rao and K Lakshminarasimha Rao, bringing the number of judges arrested to four in mining baron Gali Janardhan Reddy cash-for-bail case. Both Prabhakar, a family court judge at Srikakulam , and Lakshminarasimha , chief judge of small causes court in Hyderabad, have already been suspended.
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற