For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுத்துறை பெண் ஊழியர்களுக்கும் இனி 6 மாதம் லீவு : அரசு அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் இனி 6 மாதகாலம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :

தமிழ்நாட்டில் அரசுதுறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது போலவே மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்"என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை 90 நாட்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இனி அவர்களும் ஆறுமாதகால விடுப்பில் குழந்தைகளை நன்றாக பராமரிக்கலாம் என்ற கண்ணோட்டத்துடனேயே மகப்பேறு விடுப்பினை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
TamilNadu Government announced maternity Leave admissible to public sectors female ser vants has been enhanced from 90 days to 180 days. This would enable female employees in nursing of their children till the age of 6 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X