For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏ.கே. அந்தோணிக்கு 2-வது இடம் கொடுப்பதா?: கடும் அதிருப்தியில் சரத்பவார்

By Mathi
Google Oneindia Tamil News

AK Antony and Sharad Pawar
டெல்லி: மத்திய அமைச்சரவையில் ஏ.கே. அந்தோணிக்கு 2-வது இடம் அளிக்கப்பட்டுள்ளதில் மத்திய அமைச்சர் சரத்பவார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி 2-வது இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் 2-வது இடம் காலியானது. இந்த இடத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணியை நியமித்து சில நாட்களுக்கு முன்பு மன்மோகன்சிங் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் அந்தோணியைவிட அனுபவத்தில் மூத்தவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரணாப் முகர்ஜிக்கு அடுத்து 3-வது இடத்தில் இருந்தவர் சரத்பவார் தான். அவருக்குப் பின்னர் 4-வது இடத்தில்தான் அந்தோணி இருந்துவந்தார். இதனால் தமக்கு வழங்கப்படவேண்டிய 2-வது இடத்தை ஏ.கே. அந்தோணிக்கு கொடுத்ததில் எரிச்சலடைந்திருக்கிறார் சரத்பவார்.

தங்களது கட்சியை ஆலோசிக்காமல் அமைச்சரவையில் இடமாற்றம் ஏற்படுத்தியது அநீதி என்பது தேசியவாத காங்கிரசின் கருத்து. இதனாலேயே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பான கூட்டத்தை சரத்பவார் புறக்கணித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த அதிருப்தி மனோநிலை குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிரொலிக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இன்று தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது,

English summary
A meeting of NCP leaders is expected in New Delhi in the wake of the key UPA constituent being unhappy over the new pecking order in the government, which has relegated party chief and Agriculture Minister Sharad Pawar to the third position in the Union Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X