For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா சென்ற விமானங்களில் சாண்ட்விச்சில் ஊசிகள்- பயணிகள் பெரும் பீதி

By Mathi
Google Oneindia Tamil News

Delta Airlines
வாஷிங்டன்: அமெரிக்கா சென்ற விமானங்களில் பயணிகளுக்கு வழக்கப்பட்ட சாண்ட்விச்சில் ஊசிகள் இருந்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சாண்ட்விச்சில் ஊசிகள் எப்படி வந்தன என்பது தொடர்பாக அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனமும் எப்.பி.ஐயும் விசாரணை நடத்தி வருகின்றன.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம புறப்பட்டு சென்றது. அப்போது அந்த விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 5 சாண்ட்விச்சில் ஊசிகள் இருந்தது தெரியவந்தது. ஒரு பயணிகளியின் தொண்டையில் ஊசி குத்தியும் காயப்படுத்திவிட்டது. இதனால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சுகள் திரும்பப்பெறப்பட்டன.

இத்தகவல் அனைத்து அமெரிக்க விமானங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. இதனால் அனைத்து விமானங்களிலும் சாண்ட்விச்சுகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது அட்லாண்டா மற்றும் சியாட்டில் செல்லும் விமானங்களில் இருந்த சாண்ட்விச்சுகளிலும் ஊசிகள் இருப்பது கண்டறியப்பட்டன. இதனால் சாண்ட்விச்சுகள் திரும்பப் பெறப்பட்டு வேறு உணவுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து அமெரிக்காவின் விசாரணை அமைப்பான எப்.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆனால் சாண்ட்விச் தயாரித்த ஆம்ஸ்டர்டாம் நிறுவனமான கேட் கார்மெட் , சாண்ட்விச்சுகளில் ஊசிகள் எப்படி வந்தன என்று தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது.

English summary
Delta Air Lines Inc. and the FBI are trying to figure out how needles got into turkey sandwiches served aboard four flights from Amsterdam. One passenger was injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X