For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2-ம் உலகப் போரில் யூதர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளி 97 வயதில் கைது

By Mathi
Google Oneindia Tamil News

Laszlo Csatary
புடாபெஸ்ட்: 2-ம் உலகப் போரின் போது ஹங்கேரி நாட்டில் 16 ஆயிரம் யூதர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்த ஹிட்லரின் நாஜிப் படை அதிகாரி சிஸிக் ஸ்ட்ரே கைது செய்யப்பட்டுள்ளார்.

2-ம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஹங்கேரியில் 1944ம் ஆண்டு நாஜிப் படைகளின் அதிகாரியாக இருந்த சிஸிக் ஸ்ட்ரே சுமா 16 ஆயிரம் யூதர்களை நாஜிக்களின் கொலை முகாம்களுக்கு அனுப்பி வைத்தவர். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த 68 ஆண்டுகாலமாக தலைமறைவு வாழ்க்கை வந்த அவரை இங்கிலாந்து வெளிவரும் தி சன் ஏடு கண்டுபிடித்து செய்தி வெளியிட்டது.

உலகப் போர் முடிவடைந்த போது ஸ்ட்ரேக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஐரோப்பிய நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். கனடாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் உண்மை முகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தெரியவர அவர் நாடு கடத்தப்பட்டார். அதன் பினன்ர் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. இதைத் தொடர்து இங்கிலாந்தின் தி சன் ஊடகம் அவரைப் பற்றி பல மாதங்களாக தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட போது அவர் ஹங்கேரி தலைநகரில்தான் இருக்கிறார் என தெரியவந்திருக்கிறது,

97 வயதான நிலையிலும் அவரே வாகனங்களை ஓட்டுகிறார். நீண்ட தூரம் பயணிக்கிறார். நீண்ட நேரம் நன்றாக நடக்கக் கூடியவராக இருக்கிறார். இது தொடர்பாக ஹங்கேரி காவல்துறைக்கு தி சன் ஊடகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ஸ்ட்ரே கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

நாஜி வதைமுகாம்கள் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ட்ரே, தமக்கு இடப்பட்ட உத்தரவைத்தான் தாம் நிறைவேற்றினேன் என்று கூறியுள்ளார்.

பல லட்சம் தமிழர்களை அநீதியாக கொலை செய்துவிட்டு சர்வதேசமே போர்க் குற்றவாளி என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று மமதையில் இருக்கும் சிங்கள ராஜபக்சேக்களுக்கு நிச்சயமாக ஸ்ட்ரேயின் கைது கதிகலங்க வைத்திருக்கும்!

English summary
The world's most wanted Nazi who sent thousands of Jews to torture camps during World War II has been finally arrested in Hungary's capital Budapest about seven decades after he committed the crime. He is 97.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X