For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவை ஒபாமா அவமதிக்கவில்லை - தி வால் ஸ்ட்ரீட் விளக்கம்

By Shankar
Google Oneindia Tamil News

Obama
நியூயார்க்: இந்தியாவை அவமானப்படுத்தும் விதத்தில் அதிபர் ஒபாமா பேசவில்லை என அமெரிக்காவின் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது என்றும், இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த சில முக்கியமான சந்தைக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஒபாமாவின் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஒபாமாவின் சிறப்பு பேட்டி வெளியான உடனே மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்தார். பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அமெரிக்க பத்திரிகையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தலையங்கம் வெளியிட்டுள்ளது.

இந்திய அரசியல்வாதிகளுக்குப் பொறுக்கவில்லை...

அதில், ‘இந்திய பொருளாதாரம் பற்றி பராக் ஒபாமா கூறிய உண்மைகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு பொறுக்கவில்லை. உண்மையில் இந்தியாவை ஒபாமா அவமானப்படுத்தவில்லை, உற்சாகப்படுத்தியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "டெல்லி வர்த்தக பாதுகாப்புக்கு எதிராக எந்த வெளிநாட்டு முதலீட்டாளர் உதவி கேட்டார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சிங்கப்பூர் பிரதமர் கடந்த வாரம் டெல்லி சென்றபோதுகூட மறைமுகமாக இந்திய பொருளாதார கொள்கைகளை சாடினார்.

மேலும் பிரிட்டன் பிரிட்டனின் ஜார்ஜ் ஆஸ்போர்ன், அமெரிக்க கருவூலக செயலாளர் டிம் கெய்த்னர் ஆகியோர் வெளிப்படையாகவே கூறினர். அதையே இப்போது ஒபாமாவும் கூறியுள்ளார். ஒபாமாவின் கருத்துக்கள், படித்த இந்தியர்கள் மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி விமர்சனங்கள் வந்துள்ளன. கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி நடுநிலையாளர்கள்கூட அவரைத் தாக்கி பேசியிருக்கின்றனர்.

வெளிநாட்டு வணிகர்களின் தொழில் வாய்ப்பு குறைந்துவருவது பற்றி மட்டுமின்றி, சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடு என்ற நிலையில் இருந்து மிகவும் இந்திய அரசு பின்வாங்கியது. அதேசமயம் கடந்த கால நிகழ்ச்சிகளை பாதிக்கும் வகையில் வரிவிதிப்பு, எல்லை ஒப்பந்தங்களை போன்ற திட்டங்களை கொண்டு வந்தது.

ஒபாமாவின் செய்தியில் உண்மை இல்லை என்று இந்தியா புறக்கணித்தால், இந்தியாவின் நிலை, திறந்த பொருளாதார அமைப்பாக இல்லாமல் உலக அரங்கில் மறைந்து போகும். அப்படி ஆகிவிடக்கூடாது என அமெரிக்கா விரும்புகிறது," என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Observing that the "truth- telling" of US President Barack Obama "evidently pricked the thin skin of India's politicians", a leading American financial daily has said he is in fact "cheering" the Indian elite and not insulting them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X