For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் நடந்த தாக்குதல்களுக்கெல்லாம் "சிமி"தான் முதுகெலும்பு: அபு ஜிண்டால்

By Mathi
Google Oneindia Tamil News

Abu Jundal
டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான இஸ்லாமிய மாணவர் அமைப்புதான் (சிமி) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முதுகெலும்பாக இருந்தது என்று தீவிரவாதி அபுஜிண்டால் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

மத்திய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையின் போது அபு ஜிண்டால் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறான். கடந்த சில ஆண்டுகளாக சிமி இயக்க உள்ளூர் உறுப்பினர்கள்தான் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவிகரமாக இருந்து வருவதாகவும் அவன் கூறியிருக்கிறான்.

இதுமட்டுமின்றி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.உடன் சிமி இயக்கத்துக்கு நேரடித் தொடர்பும் இருந்ததாகவும் உள்ளூர் சிமி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இருந்தால் நிச்சயமாக பயங்கரவாத தாக்குதல்களை இந்தியாவில் நடத்தியிருக்க முடியாது என்றும் ஜிண்டால் கூறியுள்ளான்.

நகரங்களை மையமாகக் கொண்டு பல ஆயிரம் சிமி உறுப்பினர்கள் செயல்பட்டு வந்த நிலையில் அவர்களை கையாள ஐ.எஸ்.ஐ.க்கு எளிதாக இருந்தது என்றும் ஜிண்டால் விவரித்திருக்கிறான்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மும்பையில் 3 இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகள், புனே பெஸ்ட் பேக்கரி குண்டுவெடிப்பு, ஜும்மா மசூதி குண்டுவெடிப்பு ஆகியவற்றில் உள்ளூர் சிமி உறுப்பினர்களின் பங்கே அதிகம் என்றும் கூறியதுடன் சிமி அமைப்பின் ரகசிய செயல்பாடுகள் பலவற்றையும் புலனாய்வு அமைப்பிடம் ஜிண்டால் தெரிவித்துள்ளான்.

English summary
The Students Islamic Movement of India (Simi), a banned outfit, has been acting as the 'backbone' for militant organisations providing them with critical logistical support to carry out terror strikes in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X