For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் டெசோ மாநாட்டுக்கு டெலோ கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

TELO
கொழும்பு: வன்னிப் போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது சிறிதுகூட கண்ணீர்சிந்தாத கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப் பங்கேற்கக் கூடாது என்று டெலோ அமைப்பின் அரசியல் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான சிறிகாந்தா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

தி.மு.தலைவர் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான டெசோ மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள இருக்கும் செய்தியானது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமக்குத் தேவைப்படும் நேரத்தில் கையில் எடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருக்கும் சில தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழுந்து விடக்கூடாது.

கலைஞர் கருணாநிதி மீது நீண்டகாலமாகவே இலங்கைத் தழிழர்கள் அன்பும், மதிப்பும் வைத்திருக்கின்றார்கள். ஆனால் நடந்து முடிந்த இறுதிக்கட்ட போரில் வன்னியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிர் பறிக்கப்பட்ட போது தமிழ் நாட்டு முதல்வர் பதவியில் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர் விடயத்தில் சிறிதளவும் கண்ணீர் சிந்தாதவர் கலைஞர் கருணாநிதி.

எமது மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் தமிழ் நாடு முழுவதும் உணர்ச்சிப் பேரலைகள் மேலோங்கியிருந்த போது முத்துக்குமார் தீக்குளித்து உயிர்திறந்த போதும் தனது பதவியைக் கட்டிப்பிடித்து இருந்தவர் கலைஞர்.

இந்திய மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த இன அழிப்பு போரை நிறுத்தியிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் வந்திருக்காது. இலங்கைத் தமிழர் விடயத்தில் எதுவுமே செய்யாத கருணாநிதி இப்போது ஈழத்தைப் பெற்றுக் கொடுப்பதாக பாசாங்கு செய்கின்றார் என்று கூறியுள்ளார்.

English summary
TELO leader Sri Kantha has opposed Tamil Natioan Alliance to participate in DMK's TESO Conference at Chennai on August 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X