For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடுமையாகும் போக்குவரத்து விதிகள் - பள்ளி வாகன கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தும் பள்ளிகள்

By Mathi
Google Oneindia Tamil News

School Bus
சென்னை: பள்ளி கல்லூரிகள் முழுமையாக போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை இயக்க வேண்டும் என்று அரசு நெருக்கடி கொடுத்து வருவதால் வாகன கட்டணங்களை உயர்த்த தனியார் பள்ளி, கல்லூரிகள் முடிவு செய்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகளும் வாகனங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மாணவர்களை ஏற்றக் கூடாது என்பது அரசின் நிபந்தனை.

ஆட்டோவில் 3 குழந்தைகளும், மேக்சி வேன்களில் 12 பேரும் அனுமதிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. இருக்கைகளில் உட்கார்ந்து செல்ல வேண்டும் என்கின்றனர் போக்குவரத்து அதிகாரிகள். நிபந்தனைகளை மீறினால் வாகனங்க உரிமம் ரத்து, தகுதி சான்று ரத்து, பறிமுதல் என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படி போக்குவரத்து விதிகளின்படி குழந்தைகளை ஏற்றிச் சென்றால் தங்களுக்குக் கட்டுபடியாகாது என்றும் கூடுதலாக 2 மடங்கு கட்டணம் வசூலித்தால்தான் தங்களுக்கு கட்டுப்படியாகும் என்றும் வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கல்வி கட்டணம், நன்கொடை என்ற பெயரில் ஏற்கெனவே அதிக தொகையை கொடுத்து விட்டு தவிக்கும் பெற்றோருக்கு தற்போது பள்ளி வாகனக் கட்டண உயர்வும் ஒரு பெருஞ்சுமையாகிவிட்டது.

English summary
The private schools and colleges has been decided to hike the school vehicle fees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X