For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டக்காரர்கள் சதி: கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு- நெல்லை கலெக்டர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் பகுதியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை நீட்டித்து நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 2 கி.மீ. பகுதிக்குள் நுழைய தடை விதித்து குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144(1) ன் கீழ் ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இந்த பகுதியில் கலவரக்காரர்களும் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான அமைப்புகளும் கூடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், அணு உலை எதிர்ப்பாளர்கள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவித்துள்ளதால் அது குறித்து வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அணு உலை போராட்டக்காரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு கருதியும், அணுமின் நிலைய பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அரசு சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதியை பாதுகாப்பதற்கு ஏதுவாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி அணு மின் நிலையத்திற்கு எதிரான கருத்துடையவர்களும், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவிற்கு உதவி செய்தும், அவர்களை தூண்டிவிடுவதுமான அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நபர்களும் 11.08.2012 மாலை 6 மணி முதல் 10.09.2012 மாலை 6 மணி வரை கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 7 கி.மீ. பகுதிக்குள் நுழைய தடை விதித்துக் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144(1)ன் கீழ் இந்தத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Tirunelveli collector Selvaraj has announced that 144 order is extended in Kudankulam area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X