For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்த ராம்தேவ்

By Siva
Google Oneindia Tamil News

Baba Ramdev
டெல்லி: கறுப்புப் பணத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபா ராம்தேவ் இன்று நண்பகல் 12 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். நேற்று பிற்பகலில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு பவானாவில் உள்ள அம்பேத்கர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நண்பகல் 12 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் அரங்கத்தை உடனே காலி செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் அரங்கை காலிசெய்துவிட்டு ஹரித்வார் செல்கிறார்.

உண்ணாவிரதத்தை முடித்தாலும் கறுப்புப் பணத்திற்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார்.

English summary
Yoga guru Baba Ramdev ended his fast at 12 am on the sixth day of protest against black money and declared that he will launch a big movement against Congress before the Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X