For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தாளர், பத்திரிகையாளர் ரங்கராஜன் காலமானார்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று காலமானார்.

வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன்.

1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு - என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். (மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர்).

சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர்.

1927ல் கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார். சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என பத்திரிகை அனுபவம் பெற்றவர். இவருடைய வரலாற்றுப் புதினமான நான் கிருஷ்ண தேவராயன் புகழ் பெற்ற ஒன்று. கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்திற்கு ரா.கி.ரங்கராஜன் வசனமும் எழுதியுள்ளார். விகடன் இதழ்களிலும் எழுதினார். சில விகடன் பிரசுரத்தில் இருந்து புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. 85 வயதான ரா.கி.ரங்கராஜன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிரமப்பட்டார். நேற்று அவர் காலமானா. சென்னை அயனாவரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

English summary
Ra.Ki. Rangarajan, a journalist, novelist, short story writer, essayist, translator and writer of self-improvement books, known for coming out with timely publications to suit market conditions, died here on Saturday. He was 85.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X