For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வதந்தியை தடுக்க இனி 5 எஸ்.எம்.எஸ். க்கு மேல் அனுப்ப தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mobile
சென்னை: வதந்தி பரவுவதை தடுக்க நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்.க்கு மேல் அனுப்ப தடை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த வதந்தி செய்தியால் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்துள்ளது செல்போன் நிறுவனங்கள்.

அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மொத்தமாக அனுப்பப்பட்டன. இதனால் தென் மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் அச்சமடைந்து கூட்டமாக வெளியேறினர். அச்சத்தை போக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் அஸ்ஸாம், ஒரிஸா உள்ளிட்ட மாநிலத்தவர்கள் வெளியேறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனையடுத்து மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டதை தொடர்ந்து அதற்கான தடை உத்தரவு 17ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று சொல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை தொடர்ந்து ‘செல்போனில் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப முடியாது, மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
To check spread of rumours which has led to exodus of northeastern peoplefrom certain states, government banned from today bulk SMSes and MMSes for 15 days across the country. We have banned bulk SMSes and MMSes for 15 days," Union Home Secretary RK Singh told PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X