For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்- -தரிசனத்துக்கு அனுமதி கோரி பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் வழக்கத்தைவிட நேற்று கூடுதலான பக்தர்கள் குவிந்ததால் சிறப்பு தரிசனத்துக்காக காத்திருந்தோர் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திங்கள்கிழமை ரம்ஜான் விடுமுறை என்பதால் நேற்றும் கூட்டம் அலைமோதியது. ரூ300 கொடுத்து சிறப்பு தரிசனத்துக்கு டிக்கெட் எடுத்திருந்தோர் சுமார் 22 மணி நேரம் வரை காத்திருந்தனர். ஆனாலும் மாலை 5 மணிவரை அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொறுமை இழந்த பக்தர்கள் இரும்புத் தடுப்புகளை அகற்றி உடைத்தனர். அதன் பின்னர் டிக்கெட் கவுண்டர் முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அங்கு சென்று பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.

English summary
Some of the Angry Devotees demonstrate inside the Tirupati temple who were waiting nearly 22 hours for Darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X