For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்டி அடிப்பதுதானே பாலிசி... திமுகவின் நாடாளுமன்ற போராட்டம் திடீர் வாபஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
டெல்லி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும் திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் திடீரென கைவிடப்பட்டுளது.

சென்னையில் திமுக தி.மு.க. எம்.பிக்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தி.மு.க. சார்பில் நேற்று அளிக்கப்பட்டது. அப்போது டெசோ மாநாட்டு தீர்மானத்தையும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் செயலையும் விளக்கமாக தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இந்த செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, குறிப்பாக ராமேசுவரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்குவந்து மீனவர்களை கொடூரமாக தாக்கினார்கள் என்றும் பிரதமரிடம் எடுத்துக்கூறினோம். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க நிரந்தர தீர்வு அளிக்கக்கோரி டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தமிழக மீனவர்களை இலங்கை விடுதலை செய்துவிட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்படுகிறது என்றார்.

ஒரு அறிவிப்பு வந்தால் அதை மறுப்பது என்பதுதான் திமுகவின் பாலிசியாகிவிட்டதோ!

English summary
In the wake of fresh attack by Sri Lankan security forces on 13 fishermen from Tamil Nadu’s Nagapattinam district, the DMK on Tuesday decided to hold a protest demonstration in Parliament complex against the Centre on Wednesday over ‘repeated attacks’ on state fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X