For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செந்தூரனை விடுவிக்கக் கோரி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்-வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: உண்ணாவிரதம் காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் செந்தூரனை விடுதலை செய்யக் கோரி நாளை முதல் மதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

செந்தூரன் தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இன்று அங்கு சென்ற வைகோ, செந்தூரனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

செந்தூரனின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால் தமிழகம் அரசும் காவல்துறையும்தான் முழுப்பொறுப்பு. உடனடியாக அவரையும், சிறப்பு முகாம்களில் அடைபட்டு கிடக்கும் 47 ஈழ தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் முன்பு நான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறேன் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைக்கிறார். மாலையில் பழ.நெடுமாறன் முடித்து வைக்கிறார். 28-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் நடைபெறும். எங்களது கோரிக்கைகள், செந்தூரனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இது தொடரும். பொதுமக்களுக்கு எந்த தொல்லையும் தராமல், அகிம்சை வழியில் இதை நாங்கள் நடத்துவோம் என்றார் வைகோ.

English summary
MDMK will launch indefinite fast for Senthooran from tomorrow, said party general secretary Vaiko.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X