For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்கிறார் ஜெ: மூவர் குழுவும் அறிவிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: மத்தியில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் எப்பொழுது வேண்டுமானாலும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என்பதால் கட்சித் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.

அதிமுக செயற்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:

மத்தியில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம். அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு செல்லும்போது, மக்களிடம் நாம் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும்.

தேர்தல் குழு அமைப்பு

மக்களவைத் தேர்தலுக்காக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதியாக வருவார்கள். அவர்களிடம் மக்கள் குறைகளை சொல்லுங்கள். 40 தொகுதிகளுக்கும் வேண்டியதை நான் செய்வேன். மத்திய ஆட்சியில் நமது பங்களிப்பு இருந்தால் தான், தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை நாம் நிறைவேற்ற முடியும் என்றார் ஜெயலலிதா.

English summary
TN Chief Minister Jayalalithaa urged ADMK caders to stay focused on their work as the Lok Sabha election could be less than a year away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X