For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியை பிடிக்க சாதி, பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்: ஈஸ்வரப்பா வாக்குமூலம்

By Mathi
Google Oneindia Tamil News

Eshwarappa
ராய்ச்சூர்: கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க கடந்த தேர்தலில் சாதி, பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்று கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ராய்ச்சூரில் செய்தியாளர்களிடம் ஈஸ்வரப்பா கூறியதாவது:

கர்நாடக மாநில பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டியது உள்ளது. வரும் 15 நாட்களில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முறைகேடுகளால் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலைப் பொறுத்தவரையில் உண்மையைச் சொல்வதால் ஒப்புக் கொள்வதால் ஒன்றும் தப்பில்லை. கடந்த தேர்தலில் சாதி மற்றும் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருந்தோம். சாதி பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பாரதிய ஜனதா கட்சி நன்மையுடன் தீமையையையும் அனுபவிக்கிறது.

இந்த முறை கட்சிக்காக பாடுபட்டோருக்காக மட்டுமே தேர்தலில் டிக்கெட் கொடுக்கப்படும். கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமருவோம் என்றார் அவர்.

English summary
Deputy Chief Minister K.S Eshwarappa on Wednesday had a candid confession to make: The BJP selected its nominees for the Assembly elections in 2008 on the basis of caste and money power the candidates wielded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X