For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ந்த சனிபகவான்: சிறப்பு வழிபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

sani bhagavan
சென்னை: வாக்கியப் பஞ்சாக்கப்படி வக்கிர கதியில் இருந்த சனி பகவான் மீண்டும் சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்ததையொட்டி சென்னையில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சனிபகவான் சன்னதியில் எள் தீபம் ஏற்றி பரிகாரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

சனிப் பெயர்ச்சி

வாக்கிய பஞ்சாங்க ரீதியாக சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு புதன்கிழமை காலை 10.26 மணிக்கு இடம்பெயர்ந்தார். பூசம் நட்சத்திரத்திற்கு அதிபதியான சனிபகவான் இடம்பெயரும் போது பூசநட்சத்திரமாக இருந்ததால் புதன்கிழமை நாள் பூரண சனியின் ஆதிக்கம் என்று அழைக்கப்பட்டது.

கோவில்களில் வழிபாடு

வக்கிர சனி இடம் பெயர்ந்ததை ஒட்டி ஒட்டி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தனிசன்னிதியில் அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு எள்ளுவிளக்கு ஏற்றி சனிபகவானை வழிபட்டனர்.

சிம்ம ராசிக்கு விலகியது

கன்னி ராசியில் இருந்து சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி துலாம் ராசிக்கு மாறியுள்ளதால் துலாம் ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பித்துள்ளது. விருச்சிக ராசிக்கு விரைய சனி ஆரம்பித்துள்ளது. கன்னி ராசிக்கு பாத சனி அதாவது ஏழரை நாட்டு சனி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. மேஷ ராசிக்கு கண்டசனி நடக்கிறது.சிம்மராசியை சேர்ந்தவர்கள் ஏழரை சனியின் பிடியிலிருந்து மீள்கின்றனர்.

தீ விபத்து ஏற்படும்

சனி காற்றுக்கோள், செவ்வாய் நெருப்பு கோள். இவை இரண்டும் சேர்ந்து காற்று ராசியான துலாம் ராசியில் அமர்வதால் நகரப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் அதிகமான தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அனைவரும் சனிபகவானுக்கு எள்ளுவிளக்கு மற்றும் சிறப்பு யாகங்களில் கலந்து கொள்வது நல்லது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பெரும்பாலானோர் சனி பகவான் சன்னதியில் எள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

English summary
Sani peyarchi held in TN yesterday devotees special pooja Sani Bhagavan temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X