For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள்!

By Siva
Google Oneindia Tamil News

Stalin and Azhagiri
மதுரை: மதுரையில் இன்று நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆதரவாளர்களிடையே பெரும் அடிதடி நடந்து போராட்ட இடமே போர்க்களமாகிப் போனது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் போலவே திமுகவிலும் இப்போது கோஷ்டிப் பூசல் கலாச்சாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் லேசு பாசாக இருந்த இந்த கோஷ்டிப் பூசல் இப்போது தள்ளுமுள்ளு, கை கலப்பு, அடிதடி, வார்த்தைகளை விடுதல், வாரி விடுதல் என அவதாரங்களை எடுக்க ஆரம்பித்துள்ளது.

மதுரையைப் பொறுத்தவரை அண்ணன் அழகிரி கோஷ்டி மட்டும்தான் ஒரே அதிகார மையமாக இருந்து வந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் தம்பி ஸ்டாலினின் கையும் அங்கு ஓங்கத் தொடங்கி விட்டது. அழகிரி ஆதரவாளர்கள் பலரே கூட இப்போது ஸ்டாலின் பக்கம்தான் நிற்கின்றனர். குறிப்பாக மதுரை நகர் மாவட்டச் செயலாளர் தளபதி இப்போது தீவிர ஸ்டாலின் ஆதரவாளராகியுள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தளபதி, அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ கவுஸ் பாட்ஷா, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கமும் வந்திருந்தார்.

அனைவரும் மேடையில் இருந்தனர். அப்போது அழகிரி ஆதரவாளரும், சமீபத்தில் மாவட்ட அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான இசக்கிமுத்துவை மேடைக்கு வருமாறு அழைத்தனர் சிலர். இதைப் பார்த்து ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது, தடித்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் கைகள் கலக்க அந்த இடமே போர்க்களமானது. சரமாரியாக இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.

இதைப் பார்த்து போராட்டத்திற்கு வந்த தொண்டர்கள், ஸ்தம்பித்துப் போய் நின்றனர். பின்னர் போலீஸார் விரைந்து வந்து மோதலை விலக்கி விட்டனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒப்புக்கு சில கோஷங்களைப் போட்டு மாநகராட்சியைக் கண்டித்து விட்டு மூன்றே நிமிடத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தளபதி உள்ளிட்டோர் அங்கிருந்து போய் விட்டனர்.

பட்டப் பகலில் பப்ளிக்கில் நடந்த இந்த கோஷ்டி மோதலால் மதுரை வட்டார திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.

English summary
Supporters of Azhagiri and Stalin clashed in Madurai during the party's protest against Madurai Corporation administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X