For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த புயல்... சோனியா மருமகன் வத்ராவுக்கு மட்டும் பாதுகாப்பு சோதனை ஏன் இல்லை?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்ல்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வத்ராவுக்கு ஏன் விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை நடத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விமான பாதுகாப்புத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது.

சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வத்ரா, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கி மிக, மிக முக்கியப் பிரமுகர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் ராபர்ட் வத்ராவுக்கு சோதனை செய்வதிலிருந்து விலக்கு அளிப்பதால் தங்கள் பணியில் நடைமுறைப் பிரச்சனை இருப்பதாக விமான போக்குவரத்துப் பாதுகாப்புப் படையினர் கருதுகின்றனர். இதையடுத்து வத்ராவுக்கு சோதனை நடத்துவதில் இருந்து எந்த அடிப்படையில் விலக்கு அளிக்க வேண்டும்? அவரையும் சாதாரண மக்கள் போலக் கருதி ஏன் சோதனையிடக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறையிடம் விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறை கோரியுள்ளது.

English summary
What is it about Robert Vadra, son-in-law of Sonia Gandhi, that makes him on par with the President of India, the Prime Minister or the Dalai Lama, among other VVIPs? The answer, it seems, is that he is the only ordinary citizen who is never frisked at Indian airports (see the attached picture, Vadra's name figures at the bottom). And it's not because he is a real estate tycoon (courtesy, DLF's large-heartedness), as we learnt yesterday.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X