For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்படியே மனிதனைப் போலவே பேசுதப்பா இந்த பெலுகா திமிங்கலம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சான்டியாகோ: பெலுகா வகைத் திமிங்கலங்கள் மனிதர்களைப் போல மிமிக்ரி செய்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அப்படியே மனிதர்களைப் போல ..

அப்படியே மனிதர்களைப் போல ..

அமெரிக்காவில் திமிங்கிலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளர்கள் பெலுகா வகை திமிலங்கள் மனிதர்களைப் போன்று சப்தமிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனிதர்களின் குரல்வளையைப் போன்று அதன் அமைப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

பெலுகா திமிங்கலங்கள் பேசுமா?

பெலுகா திமிங்கலங்கள் பேசுமா?

டால்பின் வகை மீன்களை மனிதர்களைப் போன்று பழக்கப்படுத்தி மிமிக்ரி செய்யப் பயன்படுத்துவது உண்டு.ஆனால் என்.ஓ.சி. எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த பெலுகா திமிங்கிலம் வாய் மூடிய நிலையில் மெதுவாக மனிதர்களைப் போன்று சப்தமிடுவதாக கூறியுள்ளனர்.

குரல்வளையை மாற்றி பேசுகின்றன

குரல்வளையை மாற்றி பேசுகின்றன

மனிதர்கள் சப்தத்தை ஞாபகம் வைத்து அதுபோன்று பேசுவதற்கு அவை தனது குரல்வளை அமைப்புகளை மாற்றுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பேசுவதற்கு ஏதுவான அமைப்பை பெற்றுள்ள இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மிமிக்ரி செய்யப்பழக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களைப் போல பேச்சு

மனிதர்களைப் போல பேச்சு

1984 ம் ஆண்டு சான்டியாகவோவில் உள்ள நேசனல் மரைன் மம்மல் பவுண்டேசனில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்த டால்பின், திமிங்கலம் இரண்டும் மனிதர்களைப் போல பேசிக்கொண்டதாக ஏற்கனவே கண்டறியப்பட்டது.

டால்பின், கிளி பேசும்

டால்பின், கிளி பேசும்

டால்பின், கிளி போன்றவை மனிதர்களின் குரலைக்கேட்டு அவர்களைப் போலவே பேசும் தன்மை கொண்டவை. ஆனால் வேறு விலங்கினங்களுக்கு மிமிக்ரி செய்யும் பழக்கம் கிடையாது.

வெள்ளைத் திமிங்கலம்

வெள்ளைத் திமிங்கலம்

திமிங்கலங்கள் மனிதர்களைப் போல குரல் எழுப்புவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே கனடாவில் உள்ள வான்கூவர் அக்வேரியத்தை பராமரித்து வந்த நபர் அங்குள்ள வெள்ளைத் திமிங்கலங்கள் குழந்தையைப் போல குரல் எழுப்பியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Scientists release a recording of a captive whale making song-like sounds different to the noises whales normally use. It may sound like the indecipherable sing-song voice of the Muppets' Swedish chef or Mr Punch, but scientists say it is the first recording of a whale copying human speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X