For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரூஸ்லீயின் வீடு வேணுமா?.. ரூ. 123 கோடி கொடுத்தால் கிடைக்கும்!

Google Oneindia Tamil News

Bruce Lee's house
ஹாங்காங்: புரூஸ்லீயின் வீட்டை நினைவிடமாக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டை ரூ. 123 கோடிக்கு விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.

ஹாங்காங்சை சேர்ந்தவர் புரூஸ்லீ. தற்காப்புக் கலையான குங்பூவில் கில்லாடி. குங்பூவை அடிப்படையாக வைத்து படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் உலகப் புகழ் பெற்றார். உலகெங்கும் புரூஸ்லீக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மிகவும் இளம் வயதில் அதாவது 32 வயதிலேயே அவர் மரணத்தைத் தழுவினார். இருப்பினும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

புருஸ்லீயின் வீடு ஹாங்காங்கில் உள்ளது. இது 5000 சதுர அடி கொண்டது. 2
மாடிகளைக் கொண்ட கட்டடம் இது. ஹாங்காங்கின் கோவ்லான் டாங் பகுதியில் இது உள்ளது. அவர் கடைசியாக வசித்த அந்த வீட்டை தற்போது யூ பாங்லின் என்பவர் வைத்துள்ளார். இதை இன்னொருவர் வாடகைக்கு எடுத்து லவ் ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டலை நடத்தி வருகிறார்.

இந்த வீட்டை அரசிடம் ஒப்படைத்து நினைவிடமாக மாற்ற யூ முயன்றார். ஆனால் யூ போட்ட பல்வேறு நிபந்தனைகளை ஹாங்காங் நிர்வாகம் ஏற்கவில்லை. இதையடுத்து நினைவிடமாக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வீட்டை விற்று விட முடிவு செய்துள்ளாராம் யூ. இதற்காக அவர் வைத்துள்ள விலை ரூ. 123.5 கோடியாகும்.

இதுகுறித்து யூ கூறுகையில், இந்த கட்டிடத்தை அருங்காட்சியகம் ஆக்கும் திட்டத்துக்கு அரசு ஒத்துழைப்பு தரவில்லை. விடுதி நடத்துபவர்கள் 2 ஆண்டுகளாக வாடகை தரவில்லை. இதனால், வீட்டை ரூ.126.5 கோடிக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். புரூஸ்லீயின் வீட்டை விற்கும் யூவின் முடிவு புரூஸ்லீயின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அரசுத் தரப்பிலோ இறங்கி வருவதாகத் தெரியவில்லை.

யூவுக்கு தற்போது 90 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kung fu legend Bruce Lee's former residence in Hong Kong will be put up for sale after a plan to turn the property into a museum dedicated to the icon failed, a report said Wednesday. Philanthropist Yu Panglin, who owns the mansion, which became a rundown 'love hotel', said he was planning to sell the property for $23 million after talks with the government for the museum collapsed last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X