For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் 3-வது முறை முதல்வராகிறார் நரேந்திர மோடி- கருத்துக் கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஏபிபி நியூஸ் மற்றும் ஏசி நீல்சன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்:

- கடந்த அக்டோபர் மாதம் 91 தொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது 117 தொகுதிகளை பெற்றிருந்த பாஜக தற்போதைய தேர்தலில் 124 தொகுதிகளைக் கைப்பற்றும்

- கூடுதல் தொகுதிகளைப் பெற்றாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் சற்று குறையக் கூடும். 2007-ம் ஆண்டு தேர்தலில் 49.12% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 47% வாக்குகளைத்தான் பெறுமாம்.

- காங்கிரஸ் கட்சி கடந்த முறையைவிட சில தொகுதிகள் கூட பெற்றாலும் அதன் வாக்கு சதவீதம் 38% ஆகவே இருக்குமாம்

- பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியிருக்கும் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலின் கட்சிக்கு 3 தொகுதிகள்தான் கிடைக்கலாம்.

- செளராஷ்டிரா- கட்ச் பிரதேசத்தில் மொத்தம் 54 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 39ல் பாஜக வெல்லும்.. காங்கிரசுக்கு 11 மட்டும்!

- மத்திய குஜராத் பகுதியில் 40 தொகுதிகளில் கடுமையான போட்டி.. பாஜகவுக்கு 20 - காங்கிரசுக்கு 18!

- வடக்கு குஜராத் பகுதியில் பாஜகவுக்கு 39, காங்கிரசுக்கு 14!

- தெற்கு குஜராத் பகுதியில்35 தொகுதிகளில் 26ஐ பாஜகவும் காங்கிரஸ் 8ஐயும் கைப்பற்றலாம் என்று தெரியவந்துள்ளது.

English summary
Gujarat Chief Minister Narendra Modi is all set to lead the state for the third successive term, with an increased number of seats, said the opinion poll conducted by ABP News and AC Nielsen in October.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X