For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐடி ஆக்ட் 66(A)க்கு எதிரான வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Facebok Logo
டெல்லி: ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவோரை மிரட்டும் ஐடி ஆக்ட் 66(A)க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

டெல்லியைச் சேர்ந்த ஷிரேயா சிங்கால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஐடி ஆக்ட்66(A) என்பது அரசியல் சாசனத்தின் 4, 19 (1) (a) மற்றும் ஷரத்து 21 ஆகியவற்றை மீறுவதாக இருக்கிறது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, "இப்படியான ஒரு சட்டப்பிரிவை எதிர்த்து ஏன் எவருமே பொதுநலன் வழக்கைத் தாக்கல் செய்யவில்லை.. நாங்களே தன்னிச்சையாகவே இந்த வழக்கை எடுத்து விசாரிக்கலாமா? என யோசித்தோம்" என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார். தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாகவே தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 (A) ஐ நடைமுறைப்படுத்த சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது இந்த சட்டப் பிரிவின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் துணை கமிஷனர் அல்லது ஐஜி தலைமையிலான அதிகாரிகளின் ஒப்புதல் அவசியம் என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்ட நிலையில்தான் மத்திய அரசு அவசரமாக இந்த அறிவிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐடி ஆக்ட் 66(A)

இந்த ஐடி ஆக்ட் பிரிவானது சமூக வலைதளங்களில் ஹாயாக கருத்து சொல்வோரை சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. மமதா பானர்ஜிக்கு எதிரான கார்ட்டூன், சின்மயியுடனான மோதலில் கைது, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான கருத்தால் கைது ஆகியவை அனைத்துமே இந்தப் பிரிவின் கீழ்தான் மேற்கொள்ளப்பட்டவை. இதேபோல் பால்தாக்கரே மறைவின் போது அறிவிக்கப்படாத முழு அடைப்புக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட பெண்களும், ராஜ்தாக்கரேவுக்கு எதிராக போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட தானே இளைஞர் கைது செய்யப்பட்டதும் கூட இதே சட்டப் பிரிவின் கீழ்தான். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்பது கருத்துரிமை ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் இத்தகைய நடவடிக்கைகளை இந்தியன் பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதற்கு ஆறுதல் தரும் வகையில் உச்சநீதிமன்றமும் கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறது என்கின்றனர் கருத்துரிமையாளர்கள்!

English summary
Following the uproar over arrests made under Section 66 (A) of the IT Act, the government today issued guidelines that state approval from an officer of DCP level at rural areas and IG level in metros will have to be sought before registering complaints under the controversial section.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X