நாட்டின் அனைத்துத் தேர்தல்கள் குறித்த தகவல்களுடன் புதிய இணையத்தளம்!

1952ம் ஆண்டு தொடங்கி அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்கள், 1977 தொடங்கி அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த விவரங்களை இதில் பெறலாம்.
இந்த விவரங்கள் எல்லாம் ஆன்லைனில் இருந்தாலும் கூட அதை எளிதாகத் தேடுவதோ, எளிதாக பகுப்பாய்வு செய்யும் வகையிலான கட்டமைப்பிலோ இல்லை. வேண்டிய விவரங்களை எளிதாக சர்ச் செய்யவும், வேண்டிய தகவல்களை பில்டர் செய்து பெறவும் உதவுவது தான் இந்த இணையத்தளம்.
சுருக்கமாக நிதி டிஜிட்டல் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் முழுப் பெயர் ''New Initiatives to Transform India'' ஆகும். தொழில்நுட்ப ஆர்வலரான தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின் உருவாக்கிய நிதி டிஜிட்டல் நிறுவனம் நிதிசென்ட்ரல்.காம் (http://www.niticentral.com) என்ற இணையத்தையும் நடத்தி வருகிறது.
இந்தியாஓட்ஸ்.காம் குறித்து ராஜேஷ் ஜெயின் கூறுகையில், டிஜிட்டல் மீடியாவுடன் பெரிய அளவிலான தரவுகளும் (data) தகவல் தொழில்நுட்பமும் இணைந்தால் எதிர்கால தேர்தல் களத்தில் மக்கள் முடிவுகள் எடுப்பதில் உதவிகரமாக இருக்கும். இந்த இணைப்பைத் தான் நிதி சென்ட்ரல் செய்ய முனைந்துள்ளது என்றார்.
இப்போதைக்கு நாட்டில் நடந்து முடிந்த 200 தேர்தல்கள் குறித்த விவரங்கள் இந்த இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் தகவல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரும் கூட தாங்கள் பெற விரும்பும் தகவல்கள் குறித்து எழுதலாம். மற்றும் தவறுகள் ஏதாவது இருந்தாலும் சுட்டிக் காட்டலாம்.
வாக்காளர்கள் தங்களது தொகுதிகளின் பிரச்சனைகளைக் கூட இதில் எழுதவும் விரைவில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.nitidigital.com இணையத்தளத்தையும் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications